தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா வைரஸ் தொற்று முன்னாள் ஐஸ் ஹாக்கி வீரர் உயிரிழப்பு!

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஐஸ் ஹாக்கி வீரர் ரோஜர் சாப்போ தனது 79ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

Ice hockey player Roger Chappot passed away
Ice hockey player Roger Chappot passed away

By

Published : Apr 8, 2020, 4:28 PM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19, அந்நாட்டில் தற்போது குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை உலகளவில் கோவிட்-19 நோய்க்கு,14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சூரிச் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து அணியின் முன்னாள் ஐஸ் ஹாக்கி வீரர் ரோஜர் சாப்போ கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இவரது உடல்நலம் மோசமான நிலையை எட்டியதால், இவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு சர்வதேச ஐஸ் ஹாக்கி சம்மேளனம், சுவிட்சர்லாந்து ஐஸ் ஹாக்கி சம்மேளனம் உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். கடந்த 1960களில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ரோஜர் சாப்போ. இவர், கடந்த 1964 குளிர்கால ஒலிம்பிக் போட்டி உட்பட சுவிட்சர்லாந்து அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட் - 19 நோயால் கால்பந்து பயிற்சியாளரின் தாயார் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details