சென்னை:இந்தியாவில் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் சார்பாக வெளிடப்படும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியலில் தமிழ்நாடு வீரர் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டி இரண்டாவது சுற்றில் அசர்பெய்ஜான் நாட்டை சேர்ந்த மிஸ்ரட்தின் இஸ்கந்தராவ் என்பவரைத் தோற்கடித்து ஃபிடே (FIDE) தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். எனினும் Fide தரவரிசைப் பட்டியல் தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியத் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 வீரராக இருந்தார். தற்போது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை முறியடித்து குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதாக குகேஷ் கடந்த 2019இல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். மேலும் உலக இந்திய செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளம் வீரர் குகேஷ் என்ற சாதனை படைத்தார்
நேற்றைய உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி 9வது இடம் பிடித்தார். தற்போது விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.