தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூரு காளையை அடக்கி பழியை தீர்த்த குஜராத்! - ப்ரோ கபடி லீக்

ஹைதராபாத்: ப்ரோ கபடி லீக் தொடரின் இன்றை ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 42-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.

காளையை அடக்கி பழியை தீர்த்த குஜராத்!

By

Published : Jul 21, 2019, 9:40 PM IST

இந்தியாவின் புகழ்பெற்ற கபடி தொடரான ப்ரோ கபடி லீக் போட்டிகள், தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் 7.30 மணிக்கு நடந்த மூன்றாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரூ புல்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

இரு அணிகளும் ஆட்டத்தை நிதானமாகவே தொடங்கியது. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கத் தொடங்கிய குஜராத் அணி, படிப்படியாகப் புள்ளிகள் வித்தியாசத்தை அதிகரித்தது. முதல் பாதியின் முடிவில் 20-10 என்று குஜராத் அணி முன்னிலை வகித்தது.

புள்ளிகள் வித்தியாசத்தைக் குறைக்கப் பல முயற்சிகளை எடுத்தாலும் குஜராத் அணியின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாகப் புள்ளிகள் வித்தியாசம் அதிகரித்த வண்ணமே இருந்தது. பெங்களூருவின் பவன் ஷேராவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரைத் தவிர வேறு யாரும் சோபிக்காததால், ஆட்டத்தின் முடிவில் 42-24 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

அதிகபட்சமாகப் பெங்களூருவின் பவன் ஷேராவத் 8 புள்ளிகளையும் குஜராத்தின் சச்சின் 7 புள்ளிகளையும் சுனில் குமார், ஜி.பி மோர் தலா 6 புள்ளிகளையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கடந்த சீசன் இறுதிப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்விக்குப் பழி வாங்கியது குஜராத் அணி.

ABOUT THE AUTHOR

...view details