இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.
வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக விளையாட்டு வளாகங்களில், மைதானங்கள் திறக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்கள் தவிர, வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசிடம் கோரியுள்ளது.