தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள்! - government employees

கன்னியாகுமரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

Government employees sports
Government employees sports

By

Published : Feb 1, 2020, 11:12 PM IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டத்திலுள்ள அரசு பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது.

இதில் ஏராளமான ஆண், பெண் அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

இவர்களுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: குன்னூர் கோயிலுக்குள் புகுந்த வனவிலங்குகள் - பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details