பீலே, கால்பந்தாட்ட போட்டியில் மிக எளிதாக கோல் அடிக்கும் திறன் கொண்டிருந்தார். மேலும் அசாத்தியமான கோல்களை அடிக்கும் திறனையும் கொண்டிருந்தார். அவர் பிரேசில் கிளப் அணியான சாண்டோஸுக்காக 1,090 கோல்களும், பிரேசில் தேசிய அணிக்காக 95 கோல்களும் அடித்துள்ளார்.
பீலேவின் அனைத்து கோல்களும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது எண்ணற்ற சிறந்த கோல்களின் காட்சிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. பீலே, தனது கால்பந்தாட்ட வரலாற்றில் முழுவதும் பல அற்புதமான கோல்களை அடித்துள்ளார்.
செப். 7, 1956 பீலே தனது இளம் வயதில், அவர் சாண்டோஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். போட்டியின் இரண்டாவது பாதியின் சில நிமிடங்களில் கோல் அடித்தார். கொரிந்தியன்ஸ் ஆஃப்சண்டோஸ் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் 7-1 என்ற கணக்கில் சாண்டோஸ் வெற்றி பெற உதவினார்.
ஆக. 2, 1959 அன்று ஜுவண்டஸ் ஆஃப் சாவ் போலோ அணிக்கெதிராக, சாவ் போலோ அணிக்காக பீலே விளையாடினார். அப்போட்டியில் பீலேவின் சிறந்த கோல்களில் ஒன்றாக அறியப்பட்ட கோல் பதிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பீலே அடித்த கோலுக்கு எதிரணியான ஜுவண்டஸ், தங்களுக்கு சொந்தமான ஸ்டேடியத்தில் ஒரு சிலை மற்றும் நினைவுப்பலகை வைத்து கௌரவித்தது.
ஜூன் 19ஆம் தேதி 1958ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய பீலே வேல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 66ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.