அசெர்பைஜான்: அசெர்பைஜான் நாட்டில் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா(18) புதிய சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதிப்போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் 3-ஆம் சுற்றுப் போட்டி நடந்தது.
டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2-ஆம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!