தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி! - ஜெயலலிதா
கன்னியாகுமரி: அமமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
district-level-chess-match-for-school-students-in-nagercoil
இந்தப் போட்டிகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டிகள் நாளையும் நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு நாளை மாலை பரிசு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டிய அமமுக!