இங்கிலாந்து: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த டேபிஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சரத் கமலும், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்ட் மோதினர்.
இதில் 4-1 (11-13, 11-7, 11-2, 11-6, 11-8) என்ற நேர் செட் கணக்கில் சரத் கமல் வெற்றி பெற்றார். முன்னதாக ஆடவர் இரட்டையர் டேபிஸ் டென்னிஸில் சரத் கமல் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.