பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இத்தொடரின், ஆறாவது நாளான இன்று (ஆக. 3) பளு தூக்குதல் ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் லவ்பிரீத் சிங் பங்கேற்ற நிலையில், அவர் ஸ்னாட்சி பிரிவில் 163 கிலோவையும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 192 கிலோவையும், மொத்தம் 355 கிலோ பளுவை தூக்கினார். இதன்மூலம், மூன்றாம் இடம் பிடித்த லவ்பிரீத் வெண்கலம் வென்றார்.