கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. மேலும் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் உலக வில்வித்தை கூட்டமைப்பு, வில்வித்தைப் போட்டிகளை நடத்தத் தற்போது புதுவித திட்டத்தைக் கையாண்டுள்ளது. ஆனால் இந்த முறை வில்வித்தை வீரர்களுக்காக இல்லாமல், பொதுமக்கள் தங்களது நேரத்தை செலவிடுவதற்காக, ஆன்லைனில் வில்வித்தைத் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.