நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன், இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை பொறியியல் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். சபரிநாதன் சிறுவயது முதலே நீச்சல் அடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்துள்ளார்.
2017ஆம் ஆண்டு கை, கால்களை இரும்புச் சங்கிலியால் பூட்டுப்போட்டுக் கொண்டு 5 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
சாதனைக்காக நீந்திவரும் கல்லூரி மாணவன் இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்கும் விதமாக இன்று, இரும்புச் சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியிலிருந்து நாகைவரை 10 கி.மீ. தூரம் கடலில் நீந்த முடிவு செய்துள்ளார்.
அவரின் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடலில் நீந்த தொடங்கிய சபரிநாதன் தற்போது வேளாங்கண்ணியிலிருந்து நீந்தி நாகை நோக்கி தன் சாதனை முயற்சியை மேற்கொண்டுவருகிறார்.