ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்செனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டி இன்று (நவம்பர் 25) நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியான ஹீ ஜி டிங் - ரென் சியாங் யூ-வை எதிர்கொண்டது.
இதில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 21-க்கு 15, 22-க்கு 20 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய ஜோடி பதக்கத்தை உறுதி செய்து உள்ளது, இந்த ஜோடி இறுதி போட்டியில் மற்றொறு சீனா ஜோடியை எதிர்கொள்கிறது.
அரையிறுதி போட்டியில் வென்ற பின் சாத்விக் இது குறித்து கூறியதாவது; "நாங்கள் நன்றாக உணர்கிறோம். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் எப்படி விளையாடினோமே அந்த ரிதம் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளதாக உணர்கிறோம்.
நாங்கள் இங்கு இறுதி போட்டியில் விளையாட விரும்பினோம். தற்போது அது சத்தியமாகியுள்ளது. நிறைய அழுத்தம் இருக்கும். அதை எதிர்கொண்டு பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்டு இறுதி போட்டியில் வெல்வோம்" என்றார்.
சாத்விக் - சிராக் ஜோடி இந்த ஆண்டில் மட்டும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், இந்தோனேசியா சூப்பர் 1000, கொரியா சூப்பர் 500, சுவிஸ் சூப்பர் 300 மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பேட்மிண்டன் வேர்ல்ட் ஃபெடரேஷன் உலக சுற்றுப்பயணம் என்பது 6 நிலைகளாக பிரிக்கப்படுகிறது.
அதாவது வேர்ல்ட் டூர் பைனல், ஃபோர் சூப்பர் 1000, சிக்ஸ் சூப்பர் 750, சவன் சூப்பர் 500 மற்றும் 11 சூப்பர் 300 ஆகும். போட்டியின் மற்றொரு வகையானது பேட்மிண்டன் வேர்ல்ட் ஃபெடரேஷன் டூர் சூப்பர் 100. இது தரவரிசை புள்ளிகளையும் வழங்குகிறது. இந்த போட்டிகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறான தரவரிசை புள்ளிகளையும், பரிசு தொகைகளையும் வழங்குகிறது. அதிலும் அதிக அளவிலான புள்ளிகளையும், பரிசு தொகைகளையும் சூப்பர் 1000-ல் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் அணிக்கு ஆலோசகர் ஆகிறாரா ராகுல் டிராவிட்? எந்த அணி தெரியுமா?