செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்றும் (மே 26), இன்றும் (மே 27) நடந்தது. இப்போட்டியில், உலகின் 2ஆம் நிலை வீரரும், சீன வீரருமான டிங் லிரன் உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா மோதினார்.
நேற்றைய தினத்தில், டிங் லிரன் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், அதே ஆதிக்கம் இன்றும் தொடர்ந்தது. இறுதியில், பிரக்ஞானந்தா தோல்வியை ஒப்புக்கொள்ள, டிங் லிரன் வெற்றியடைந்து செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரை வென்றார்.
சதுரங்க சாம்பியன் போட்டி 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது செஸ்ஸபிள் தொடர் நான்காவது தொடராகும்.
தற்போதுவரை நடைபெற்ற தொடர்களின் அடிப்படையில், நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் முதலிடத்தையும், இந்தியாவின் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதன்மூலம், பிரக்ஞானந்தா இந்திய ரூபாய் மதிப்பில் 47.56 லட்சம் (61,250 அமெரிக்க டாலர்) பரிசுத்தொகையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசியக்கோப்பை ஹாக்கியில் இந்தியா 16 கோல் அடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி!