சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் மகாபலிபுரத்தில் நடைபெற்ற வருகிறது. அதன் 8ஆவது சுற்று போட்டிகள் நேற்று (ஆக. 6) நடைபெற்றன. அதன் முழு விவரம், இதோ...
இந்திய ஓபன் அணிகள்
ஓபன் 'ஏ' vs அர்மேனியா:இந்திய ஓபன் ஏ அணி அர்மேனியா உடன் 1.5/2.5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவியது.
- ஹரிகிருஷ்ணா VS கேப்ரியல் சர்கிசியான் - முடிவு: தோல்வி - 102ஆவது நகர்வு
- விதித் சந்தோஷ் VS ராண்ட் மெல்கும்யான் - முடிவு: சமன் - 42ஆவது நகர்வு
- அர்ஜூன் எரிகேசி VS சாம்வேல் டெர் - சகாக்யான் - முடிவு: சமன் - 84ஆவது நகர்வு
- நாராயணன் VS ராபர்ட் ஹோவ்ஹன்னிஸ்யான் - முடிவு: சமன் - 45 வது நகர்வு
ஓபன் பி vs அமெரிக்கா:இந்திய ஓபன் பி அணி, அமெரிக்கா அணியை 3/1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- குகேஷ் VS ஃபேபியானோ - முடிவு: வெற்றி - 46ஆவது நகர்வு
- சரின் நிஹால் VS லெவோன் அரோனியன் - முடிவு: சமன் - 35ஆவது நகர்வு
- பிரக்ஞானந்தா VS வெஸ்லி - முடிவு: சமன் - 33ஆவது நகர்வு
- ரவுணக் சத்வாணி VS லெய்னியர் டொமின்கியூஸ் பெரெஸ் - முடிவு: வெற்றி - 45ஆவது நகர்வு
ஓபன் C vs பெரு:இந்திய ஓபன் சி அணி, பெரு அணியிடம் 1/3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
- சூர்யா சேகர் கங்குலி VS எமிலியோ கார்டோவா - முடிவு: தோல்வி - 37ஆவது நகர்வு
- சேதுராமன் VS கிறிஸ்தியன் - முடிவு: சமன் - 59ஆவது நகர்வு
- அபிஜித் குப்தா VS ரெனாடோ டெர்ரி - முடிவு: தோல்வி - 60ஆவது நகர்வு
- கார்த்திகேயன் முரளி VS டெய்வி வெரா சிகியுனாஸ் - முடிவு: சமன் - 42ஆவது நகர்வு