ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 போட்டிகளில், 4 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம் மும்பை அணி 11 போட்டிகளில், 2 வெற்றிகள் 9 தோல்விகள் என்றக் கணக்கில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.