சிங்கப்பூரில் இன்று(பிப்.25) நடந்த சர்வதேசப் பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று, 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முதன்முறையாக 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சானு 191 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஜெசிகா செவாஸ்டென்கோ 167 கிலோ, அதாவது சானுவை விட 24 கிலோ எடை குறைவாக தூக்கி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த எல்லி கசாண்ட்ரா எங்லெபர்ட் 165 கிலோ எடையை தூக்கிய மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றதை அடுத்து பங்கேற்ற முதல்போட்டி இதுவாகும்.