தீபா கர்மாகர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பதக்கம் வென்றவர். 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் அவர் இந்த (வெண்கலம்) பதக்கத்தை வென்றார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீராவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா?
முழங்காலில் காயமடைந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது பற்றி அவரது பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு முழங்காலில் காயமடைந்தார். அதன்பிறகு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தீபா கர்மாகர் பங்கேற்பாரா என அவரது பயிற்சியாளர் பிஷ்வேஸ்வர் நந்தியிடம் கேட்டதற்கு அவர், “ தீபா கர்மாகர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழுவதுமாக குணமடைந்த பின்புதான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார். ஆனால், இதுகுறித்து தீர்க்கமாக எந்த முடிவும் கூற முடியாது.”, எனக் கூறினார்.
காயமடைந்ததன் காரணமாக தீபா கர்மாகர் போன மாதம் மங்கோலியாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.