தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் சென்னை சிறுவன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தேசிய அளவில் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சென்னை டேக்வோண்டா அகாடமியைச் சேர்ந்த மாணவன் 9 வயதாகிய பிரணவ் என்பவர் 25 வயதுக்குட்பட்டோருக்கான டேக்வோண்டா போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை வந்த பிரணவுக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
பின்னர் டேக்வோண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் பிரணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா என்கிற தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்.
இந்த டேக்வோண்டா தற்காப்புக் கலை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பெற்றோர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் மாநில வீரர்களுடன் விளையாடும்போது போட்டி கடுமையாக இருந்தது” எனக் கூறினார்.
வெற்றி பெற்ற மாணவன் பிரணவின் பயிற்சியாளர் பேசுகையில், ”மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வோண்டா போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பிரணவ் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். அடுத்து சர்வதேச அளவில் விளையாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: Emerging Asia Cup 2023 Final : பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன்! 2வது முறையாக பாகிஸ்தான் ஏ சாம்பியன்!
மூன்று மாநிலத்திற்குள் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு இடையே மட்டுமே இப்போட்டி நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற டேக்வோண்டா போட்டியில் பிரணவ் வெள்ளிப்பதக்கம் வெற்றி பெற்றதால் இந்தியாவின் பி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறினார்
முன்னதாக தமிழ்நாடு டேக்வோண்டா சங்கம் சார்பில் 34வது மாநில டேக்வோண்டா சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவாரூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் சென்னை மாவட்டம் சார்பில் 68கி பிரிவில் எஸ்.அஜய்ராகன், ரோஷினி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். 46கி பிரிவில் ஸ்ரேயா அந்தோணி முதலிடம் பிடித்தார்
இதையும் படிங்க: World Silambam Competition: 3-வதுமுறையாக தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்கள்!