நேபாளத்தில் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை கலைவாணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
நேபாளத்தில் தங்க பதக்கத்தை வென்று சென்னை திரும்பிய வீராங்கனை கலைவாணிக்கு விமான நிலையத்தில் குடும்பத்தினர், நாண்பர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கலைவாணி பேசுகையில், பாகிஸ்தான், பூட்டான் நாட்டு வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு வந்தேன். நேபாள் நாட்டு வீராங்கனையை வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளேன். தங்கப்பதக்கத்தை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இருந்து 10 ஆண்களும் 6 பெண்களும் பங்கேற்றோம். தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டுமே கலந்துகொண்டேன்.
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உதவி செய்தால் குடும்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பிர்சனைகளிலிருந்து எளிதாக வெளிவர முடியும். பொருளாதாரம் இல்லை என்பதால் தான் நிறைய திறமைசாலிகள் வளராமல் உள்நாட்டிலேயே சாமானியனாக சுற்றிவருகிறோம். எனக்கு உதவி செய்வதாக கூறியிருக்கிறார்கள். இனிமேல் தான் அதுகுறித்து கேட்கவேண்டும்.