இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருந்தது. அப்போது கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மூன்று மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டிச. 18ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜே கவுலி கூறுகையில், ''குருகிராமில் நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் பற்றி பேசினோம். அப்போதே தேர்தலுக்கான அறிவிப்பும் வழங்கப்பட்டது.
சரியாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். டிச. 2ஆம் தேதிமுதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். அன்றைய தினமே தேர்தல் நடக்கும் இடம் பற்றி உறுதிசெய்யப்படும்'' என்றார்.