தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL2019: ரோஹித் குமாரின் அட்டாக்கில் வெற்றிவாகை சூடிய பெங்களூரு அணி! - ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்

டெல்லி: புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 41-30 என்ற கணக்கில் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

bengaluru vs jaipur

By

Published : Aug 26, 2019, 4:02 PM IST

புரோ கபடி 2019 தொடரின் லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 58-ஆவது லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணி முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே 9-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி ரோகித் குமார் ’சூப்பர் ரைடு’ முறையில் எதிரணியை ஆல் அவுட் செய்தார்.

இதன்மூலம் முதல் பாதி முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 22-8 என்ற கணக்கில் ஜெய்பூர் அணியை விட முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தைத் தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை சேர்க்க, ஆட்டம் அனல் பறந்தது.

இறுதியில் 41-30 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி, ஜெய்பூரின் பிங்க் பேந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் 13 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

ABOUT THE AUTHOR

...view details