தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL2019: பாட்னா பைரேட்ஸை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்! - பாட்னா பைரட்ஸ்

சென்னை: புரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

pro kabbadi league

By

Published : Aug 23, 2019, 3:18 PM IST

புரோ கபடி லீக்கின் ஏழாவது சீசன் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே புள்ளிக் கணக்கை தொடங்கிய பாட்னா அணி 10 நிமிடங்களுக்குள்ளாகவே 8-4 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதி முடிவில் 15-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலைக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி தொடங்கியதுமே பெங்கால் அணி, நீராஜ் குமார் தனது ரைடின் மூலம் 2 புள்ளிகளை எடுத்து பாட்னா அணியை ஆல் அவுட் செய்தது. அங்கிருந்து தொடங்கிய பெங்கால் வாரியர்ஸ் அணியின் வெற்றிப் பாதை அவர்களின் தாக்குதல், தற்காத்தல் (அட்டாக், டிஃபென்ஸ்) என இரு பிரிவிலும் எதிரணி வீரர்களை திணறடித்தது.

இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணி 36 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பாட்னா பைரேட்ஸ் அணியை பொறுத்தமட்டில் 17 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details