தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

10 நாட்களில் பஜ்ரங் புனியா இரண்டாவது தங்கம்! - wrestling

ரஷ்யாவில் நடைபெற்ற அலி அலிவ் மல்யுத்த தொடரின் 65 கிலோ பிரீஸ்டைல் எடைப்பிரிவில் தங்கம் வென்று இந்திய வீரர் பஜ்ரங் புனியா அசத்தியுள்ளார்.

Bajrang punia

By

Published : May 3, 2019, 3:37 AM IST

ரஷ்யாவின் டகெஸ்டன் நகரில் அலி அலிவ் மல்யுத்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா, ரஷ்ய வீரர் விக்டார் ரஸாடினை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பஜ்ரங் புனியா 13-8 என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

25 வயதான புனியா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரிலும் இதே பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் பத்து நாட்களுக்குள் புனியா மீண்டும் ஒரு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் அடுத்ததாக மே 6 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல மாடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற உள்ள கிராப்பில் அட் தி கார்டன் (Grapple at the Garden) மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details