கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் தொடர், அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு(ஐஓசி) அறிவித்திருந்தது.
இதனால் இந்தாண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் உள்ளிட்ட சில வீரர்கள், உலக ஊக்கமருந்து தடுப்பாணையத்தல் (வாடா) தடை விதிக்கப்பட்டடு, ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது ஒலிம்பிக் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வீரர்களில் தடைக்காலம் முடிவடைந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.