உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 52 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் அமித் பங்கல். ஜோர்டானில் நடக்கும் ஆசிய குத்துச்சண்டை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் அமித் பங்கல் தற்போது கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உலக மிலிட்டரி கேம்ஸ் தொடரில் 5-0 என தோல்வியடைந்திருந்தார். இதனால் இந்தப் போட்டியில் அமித்தின் செயல்பாடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தொடரில் மங்கோலியாவின் கர்குவை அமித் எதிர்கொண்டார். இதில் 30-27, 29-28, 28-29, 28-29, 29-28 என புள்ளிக் கணக்கில் அமித் வென்றார். அடுத்தப் போட்டியில் அமித் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு டோக்யோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற முடியும்.
அடுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கலை எதிர்த்து, பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலம் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தொடங்கியது முதல் குளிர்கால கேலோ விளையாட்டுப் போட்டிகள்