உலக சாம்பியன்ஷிப் தடகள தொடர் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று இத்தொடரில் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி பங்கேற்றார்.
இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பே 66.56 மீட்டர்களை வீசி உலக சாம்பியஷிப் தடகளத் தொடரில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் அன்னு ராணி அதிக பட்சமாக 60.40 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி எட்டாவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவினார். இதற்கு முன் அன்னு ராணி இத்தொடரின் அரையிறுதிப்போட்டி ஈட்டி எறிதலில் 62.43 மீட்டருக்கு ஈட்டியை வீசி தேசிய சாதனைப் படைத்தார் என்பது குறிபிடத்தக்கது.
இதையும் படிங்க:#worldchampionship: #worldchampionship: 'ஒரே போட்டி...இரண்டு சாதனைகள்' - ஈட்டி எறிதலில் அசத்திய அன்னு ராணி!