தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிபிஇ உடையில் கேல் ரத்னா விருதைப் பெற்ற ராணி ராம்பால்!

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உடையில் விருதை பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Women's hockey Captain Rani Rampal attends National Sports Awards ceremony in PPE kit
Women's hockey Captain Rani Rampal attends National Sports Awards ceremony in PPE kit

By

Published : Aug 29, 2020, 7:59 PM IST

இந்திய ஹாக்கி அணியின் முன்னோடி தயான் சந்த் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா, தயான் சந்த், துரோணாச்சாரியா ஆகிய விருதுகளை இந்த தினத்தில் வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், தயான் சந்த்தின் 115ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுடன் ராணி ராம்பால்

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உடையணிந்து, குடியரசு தலைவரிடன் விருதைப் பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பதிவில், “இவர் (ராணி ராம்பால்), இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன். ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பெற, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அவர் தயாராக உள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா - பிசிசிஐ அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details