தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2020, 5:42 PM IST

ETV Bharat / sports

இந்தியாவின் மிகப்பெரும் ஹாக்கி மைதானத்தை உருவாக்கும் ஒடிசா!

20 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாட்டின் மிகப்பெரும் ஹாக்கி மைதானம் ரூர்கேலாவில் கட்டப்படும் என ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று அறிவித்தார்.

Watch: Odisha CM announces India's largest hockey stadium in Rourkela
Watch: Odisha CM announces India's largest hockey stadium in Rourkela

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டிகளில், இந்திய அணி இதுவரை ஒரு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் ஒடிசா மாநிகபுவனேஷ்வர் மற்றும் ரூர்கோலாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்காக 20ஆயிரம் பேர் அமரும் வகையில் ரூர்கேலாவில் ஹாக்கி மைதானத்தை கட்டமைக்கவுள்ளதாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “2023ஆம் ஆண்டு ஒடிசாவில் மீண்டும் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகிறேம். இத்தொடரான புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கென ரூர்கேலாவில், இந்தியாவின் மிகப்பெரும் ஹாக்கி மைதானத்தை கட்டவுள்ளோம். இதில் சுமார் 20ஆயிரம் பார்வையாளர்கள் அமந்து போட்டிகளை காணும் வகையில் இந்த மைதானம் உருவாகவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

15 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த மைதானம் ரூர்கேலாவின் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படும் என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊக்கமருந்து சர்ச்சை: சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை!

ABOUT THE AUTHOR

...view details