தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நியூசிலாந்திடம் போராடி தோற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

indian-women-hockey-team-lose-2-1-to-new-zealand
indian-women-hockey-team-lose-2-1-to-new-zealand

By

Published : Jan 27, 2020, 2:47 PM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று முதல் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து டெவலப்மெண்ட் அணியுடனானப் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றிருந்ததால், இந்தப் போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கு 3ஆவது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்தின் மெகன் ஹல் முதல் கோலை அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் குவார்ட்டரின் இறுதி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இந்தியாவின் சலீமா கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் குவார்ட்டரின் இறுதியில் இரு அணிகளும் தலா 1-1 என்ற நிலையில் இருந்தன.

இதையடுத்து அடுத்தடுத்த குவார்ட்டர்களில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. பின்னர் நான்காவது குவார்ட்டரின்போது ஏற்பட்ட தவறால், நியூசிலாந்து அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி நியூசிலாந்து அணி கோல் அடித்து வெற்றிபெற்றது.

இறுதியாக 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ஜோயர்ட் பேசுகையில், '' இந்த போட்டியின் தொடக்கத்தில் நாங்கள் சிறிது சிரமப்பட்டோம். கோல் அடிப்பதற்கு சில வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கினோம். ஆனால் அதனைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அடுத்து நடக்கவுள்ள ஆட்டங்களில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம்'' என்றார்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல் கால்பந்து - கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர்களுக்கு தடை

ABOUT THE AUTHOR

...view details