ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி தகுதிச்சுற்று ஆட்டத்தில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி! - lost
டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹாக்கி தகுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டதின் இரண்டாவது நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் சிங் கோல் அடித்து அசத்தினார். அதன்பின் நியூசிலாந்து அணியின் ஜாகப் ஸ்மித் ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
பின்பு நியூசிலாந்து அணியின் சாம் லேன் ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பிறகு இந்திய அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.