தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தகுதிச் சுற்று ஹாக்கி: இறுதியில் நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி!

டோக்கியோ: ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் நீயூசிலாந்து அணியை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதியடைந்துள்ளது.

indian hockey team

By

Published : Aug 21, 2019, 3:25 PM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின.

விறுவிறுப்பான இந்த போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே இந்திய அணியின் ஹர்மன்பிரீட் சிங் கோல் அடித்து அசத்தினார்.

மந்தீப் சிங்

அதன்பின் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி டிஃபென்ஸ் மற்றும் அட்டாக் இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ஷம்ஷர் சிங் கோலடிக்க, அதைத்தொடர்ந்து நிலகண்ட சர்மா 22 ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.

26ஆவது நிமிடத்தில் குர்சாஹிபிஜித் சிங்கும், 27ஆவது நிமிடத்தில் மந்தீப் சிங்கும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இறுதிவரை நியூசிலாந்து அணி வீரர்களினால் இந்திய அணியின் டிஃபென்ஸை மீறி கோலடிக்க இயலவில்லை. இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தகுதியடைந்துள்ளது. இதற்கு முன் இந்த இரு நாடுகளும் சந்தித்த தகுதிச் சுற்று லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details