இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஹாக்கித் தொடர் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
களத்தில் வேகம் காட்டத் தொடங்கிய இந்திய ஜூனியர் அணியின் இந்திய வீராங்கனை லால்ரிங்கி ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில்முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு பதிலடிதர நியூசிலாந்து அணி தவறியதால் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாதியில் இந்திய அணிக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் கோல் அடிக்காமல் வீணாக்கியது.