தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாக்கி; இந்தியா-உஸ்பெகிஸ்தான் இன்று மோதல்! - ஹாக்கி

புவனேஷ்வர்: ஒடிசாவில் நடைபெற்றுவரும் எஃப்.ஐ.ஹெச். சீரிஸ் ஃபைனல் ஹாக்கித் தொடரில் இன்று இந்திய அணி உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

By

Published : Jun 10, 2019, 2:06 PM IST

ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வரிலுள்ள கலிங்கா மைதானத்தில் எஃப்.ஐ.ஹெச். சீரிஸ் ஃபைனல் என்னும் ஹாக்கித் தொடர் நடைபெற்றுவருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிச் சுற்றுக்குச் செல்ல இந்தியா இத்தொடரின் இறுதிப் போட்டியை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ரஷ்யாவை 10-0 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது லீக் போட்டியில் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக ஹர்மன் ப்ரீத் சிங் 3 கோல்களையும் ஆகஷ்தீப் சிங், மன்பிரீத் சிங் தலா 2 கோல்களையும் அடித்துள்ளனர்.

தரவரிசையில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்தியா 43ஆவது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தானை புவனேஷ்வரிலுள்ள கலிங்கா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறது. தற்போது ஏ பிரிவில் முதல் இடத்திலுள்ள இந்தியா இந்தப் போட்டியை டிரா செய்தாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

முன்னதாக பி பிரிவில் இன்று காலை ஜப்பானுடன் நடைபெற்ற லீக் போட்டியில் அமெரிக்கா 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

ABOUT THE AUTHOR

...view details