கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. பின்னர் கடந்த மாதம் வீரர்கள் பயிற்சிகளுக்குத் திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில், தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள பெங்களூரு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில், இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.