தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி முகாம்கள் தொடக்கம்! - கரோனா செய்திகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஹாக்கி விளையாட்டுப் பயிற்சிகள், வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பெங்களூருவில் நடைபெறுமென இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Camps for Indian men's & women's hockey teams to start on Tuesday
Camps for Indian men's & women's hockey teams to start on Tuesday

By

Published : Aug 1, 2020, 9:24 PM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய ஆடவர், மகளிர் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து தற்போது இந்திய விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிக்கு திரும்ப ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆகாஸ்ட் 4ஆம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள, இந்திய விளையாட்டு அமைச்சக மையத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்தப் பயிற்சி முகாமிற்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலில் 14 நாள்களுக்கு முகாமிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வீட்டுக் காவலிலிருந்து ரொனால்டினோ விடுவிப்பு?

ABOUT THE AUTHOR

...view details