இங்கிலாந்து கால்பந்து அணியின் முடிசூட மன்னனாக திகழ்ந்த முன்னாள் கேப்டன் வேய்ன் ரூனி, ஒப்பந்த அடிப்படையில் இங்கிலாந்தின் டெர்பி அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்சியாளராக களமிறங்குகிறார் வேய்ன் ரூனி! - legend
டெர்பி: இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வேய்ன் ரூனி, டெர்பி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
wayne
33 வயதான வேய்ன் ரூனி, இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இதுவரை 537 போட்டிகளில் 253 கோல்களை அடித்து, ஜாம்பவான் பாபி சார்ல்டனின் சாதனையை முறியடித்தவர். அதுமட்டுமல்லாது இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 18 மாத ஒப்பந்தம் அடிப்படையில் டெர்பி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் வேய்ன் ரூனி.