தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வாட்ஃபோர்ட் அணியில் மூன்று பேருக்கு கரோனா!

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான வாட்ஃபோர்ட் எஃப்சி அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் உள்பட மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Three Watford players have tested positive for covid-19
Three Watford players have tested positive for covid-19

By

Published : May 20, 2020, 4:22 PM IST

கரோனாவால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் உயிரிழந்துள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பன்டெஸ்லிகா உள்ளிட்ட ஒரு சில கால்பந்து தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப்பான வாட்ஃபோர்ட் எஃப்சி அணி, தங்களது அணியைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 48 மணி நேர பயிற்சிக்குப் பின் கிளப் வீரர்கள் மற்றும் ஊழியர்களைப் பரிசோதனை செய்ததில், மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் விளையாட்டு வீரர், மற்ற இருவர் கிளப் ஊழியர்கள் ஆவர்.

மேலும் பிரீமியர் லீக் வழிகாட்டுதல்களின்படி பாதிக்கப்பட்ட மூவரும் கிளப்பின் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், மூன்று கிளப் அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

ABOUT THE AUTHOR

...view details