ஸ்காட்லாந்தில் 2019-20 ஆண்டுக்கான ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், எடின்பர்க் நகரிலுள்ள ஈஸ்டர் ரோட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஹைபெர்னியன் அணி, ரேஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிறப்பாக விளையாடிய ரேஞ்சர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைபெர்னியன் அணியை வீழ்த்தியது. ரேஞ்சர்ஸ் அணி தரப்பில் வீரர் ரயன் கென்ட் நான்காவது நிமிடத்திலும், ஜோ அரிபோ எட்டாவது நிமிடத்திலும், டொஃபே 53ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இதனிடையே, ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பந்தை தடுக்க சென்ற ஹைபெர்னியன் அணியின் டிஃபெண்டர் ரயன் பொர்டியஸ், பந்துக்கு பதிலாக ரேஞ்சர்ஸ் வீரர் பொர்னா பரிசிக்கை தள்ளிவிட்டார். இதனால், நடுவர் ரயன் பொர்டியஸுக்கு ரெட் கார்ட் வழங்க, டக் அவுட்டில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த இரு அணியின் பயிற்சியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.