கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதியது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணி வீரர்களும் கோலடிக்கப் போராடினர். பின்னர் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சுர்சந்த்ரா சிங் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.