தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரொனால்டோவை அழைத்து வந்த ஜுவென்டஸ் அணி! - தனி மருத்துவ விமானம்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சிறப்பு மருத்துவ விமானம் மூலம் ஜுவென்டஸ் அணி இத்தாலிக்கு அழைத்து வந்தது.

Ronaldo returns to Juventus on special medical flight
Ronaldo returns to Juventus on special medical flight

By

Published : Oct 15, 2020, 4:32 PM IST

Updated : Oct 15, 2020, 5:33 PM IST

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகக் கருதப்படுபவர் போர்ச்சுக்கீசிய அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு சமீபத்தில் கரோனா பரிசோதனை மேற்கெள்ளப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் ரொனால்டோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவ விமானம் மூலம், இத்தாலிக்கு ரோனால்டோ திரும்பியுள்ளார்.

இது குறித்து ஜுவென்டஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரொனால்டோவின் வேண்டுகோளின்படி, மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ விமானத்தின் மூலம் அவர் இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது வீட்டிலேயே ரொனால்டோ தனிமைப்படுத்தப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அனந்த்நாக் மகளிர் கிரிக்கெட் லீக்: இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து கூறிய சச்சின்...!

Last Updated : Oct 15, 2020, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details