ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான யுஇஎஃப்ஏ (UEFA) நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய கண்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி குரோஷியா அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது போர்ச்சுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளித்துள்ளார்.