தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வீட்டுக் காவலிலிருந்து ரொனால்டினோ விடுவிப்பு? - தமில் விளையாட்டு செய்திகள்

போலி ஆவண சர்ச்சையில் சிக்கி, பராகுவே காவல்துறையினரால் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ronaldinho set to be released from house arrest in Paraguay
Ronaldinho set to be released from house arrest in Paraguay

By

Published : Aug 1, 2020, 5:43 PM IST

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. இவர் கடந்த ஏப்ரல் மாதம் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக, அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து ரொனால்டினோ மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், அவருக்கு அபராதம் விதித்து, சிறையில் அடைக்கும் படி பராகுவே நீதிமன்றம் உத்தவிட்டது. இதையடுத்து 32 நாட்கள் சிறையிலிருந்த ரொனால்டினோ, பின் தனது பிணை பத்திரத்தை செலுத்தியதையடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ரொனால்டினோவின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், ரொனால்டினோ, அவரது சகோதரர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:இரண்டாவது முறையும் கரோனா பாசிட்டிவ் - போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மெக்சிகோ வீரர்

ABOUT THE AUTHOR

...view details