தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சக வீரரை புகழ்ந்து தள்ளிய ஜாவி மார்டினெஸ்! - பன்டெஸ்லிகா 2020

பேயர்ன் முனிச் அணியின் ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி தனது விளையாட்டில் மிகசிறந்த ஆட்டத்தை கொடுத்துள்ளதாக மிட்பீல்டர் ஜாவி மார்டினெஸ் பாராட்டிவுள்ளார்.

Robert Lewandowski having best year of his career: Javi Martinez
Robert Lewandowski having best year of his career: Javi Martinez

By

Published : Jun 6, 2020, 5:20 AM IST

பன்டெஸ்லிகா கால்பந்து தொடரின் பிரபல கிளப் அணியான பேயர்ன் முனிச் அணியின் நட்சத்திர மீட்பீல்டராக வலம் வருவபர் ஜாவி மார்டினெஸ். இவர் தனது அணியில் ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி மிகசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாவி, ‘ராபர்ட் தனது விளையாட்டு வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டைக் கொண்டிருக்கிறார். அவர் அடிக்கும் பந்துகள் அனைத்தும் கோலாக மாறுகிறது.

அவர் ஒரு சிறுத்தையை போல் கலத்தில் செயல்பட்டு வருகிறார். மேலும் உலக கால்பந்து வீரர்கள் தரவரிசையிலும் அவர் ஒன்பதாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். அவரது வெற்றிகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

பேயர்ன் அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக வலம்வரும் 31 வயதான ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, இதுவரை 37 போட்டிகளில் 43 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதன்முலம் பேயர்ன் அணி பன்டேஸ்லிகா புள்ளிப்பட்டியலில் 86 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உமர் அக்மல் வழக்கு, 11ஆம் தேதி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details