டைநமோ கீவ்க்கு எதிரான ஐரோப்பா போட்டியில் செல்ஸீ வீரர் கால்யும் ஹட்சன் ஒடோயை குறிப்பிட்டு கால்பந்து ரசிகர்கள் இனவெறி தூண்டும் வகையில் குறள் எழுப்பியதாக பிரச்னை எழுந்துள்ளது. போட்டி முடிவடைந்த பிறகு இது குறித்து செல்ஸீ அணி நடுவரிடமும் புகார் அளித்துள்ளது.
டைநமோ கீவ்-செல்ஸீ இடையேயான போட்டி இறுதி கட்டத்தை எட்டிய சமயத்தில் தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத டைநமோ கீவ் ரசிகர்கள் 18 வயதே ஆன செல்ஸீ வீரர் கால்யும் ஹட்சன் ஒடோயை குரங்கு என குறிப்பிட்டு கத்தியுள்ளனர்.