இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய காரோனா வைரஸ் பரவி வருவதால், இபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அணி ஊழியர்கள் என சுமார் 1,311 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனையின் முடிவில் வீரர்கள், அணி ஊழியர்கள் என 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அணி ஊழியர்கள் என 1,311 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகளுக்கு இடையேயான இபிஎல் லீக் போட்டி கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இங்கிலாங்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வேகமாக பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸைக் கட்டுப்பட்டுத்தும் நடவடிக்கையாக ஜன.04ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். இருப்பினும் இபிஎல் தொடரை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசிலாந்து!