தமிழ்நாடு

tamil nadu

இபிஎல்: மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி ஆட்டம் டிரா!

By

Published : Dec 27, 2020, 9:41 AM IST

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

Premier League: Manchester United, Leicester City play out 2-2 draw
Premier League: Manchester United, Leicester City play out 2-2 draw

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (டிச.26) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனடெட் அணி - லெய்செய்டர் சிட்டி அணியை எதிர்த்து விளையாடிது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தனர். இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மார்கஸ் ராஷ்ஃபொர்ட் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் கோலடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணியின் ஹார்வி பர்ன்ஸ் கோலடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற வீதம் சமநிலையை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மான்செஸ்டர் அணியின் புருனோ ஃபெர்னாண்டஸ் ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லெய்செஸ்டர் சிட்டி அணிக்கு 85ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் மூலம் மற்றொரு கோல் கிடைத்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் என்ற வீதத்தில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:‘தந்தையின் கனவை சிராஜ் நிறைவேற்றி விட்டார்’

ABOUT THE AUTHOR

...view details