தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

செல்சீ வீரர் ஹட்சன் ஒடோய்க்கு கொரோனா பாதிப்பு! - கொரோனா பாதிப்பு

லண்டன்: பிரீமியர் லீக் கிளப் அணியான செல்சீயின் பிரபல வீர ஹட்சன் ஒடோய்-க்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

premier-league-chelseas-callum-hudson-odoi-tests-positive-for-coronavirus
premier-league-chelseas-callum-hudson-odoi-tests-positive-for-coronavirus

By

Published : Mar 13, 2020, 3:19 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் பிரபல செல்சீ அணியின் வீரர் ஹட்சன் ஒடோய் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்த அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இது குறித்து செல்சீ அணி நிர்வாகம் கூறுகையில், ''ஹட்சன் ஒடோயுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாதவர்கள் விரைவாகப் பணிக்கு திரும்புவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆடவர் அணி பயிற்சி செய்யும் மைதானங்கள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்படும்'' என அறிவித்துள்ளது.

முன்னதாக ஆர்சனல் அணியில் தலைமைப் பயிற்சியாளர் மைக்கெல் ஆர்ட்டெட்டாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏப்ரலுக்குத் தள்ளிப்போன ஐபிஎல் தொடர்?

ABOUT THE AUTHOR

...view details