நடப்பு சீசனுக்கான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் டி பிரிவுக்கான நேற்றைய போட்டியில் இத்தாலியின் யுவண்டஸ் அணி, ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணியை எதிர்கொண்டது. கடந்த சீசனில் டூரின் நகரில் உள்ள அலியான்ஸ் மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய நாக் அவுட் போட்டியில் ரொனால்டோ இரண்டு கோல் அடித்ததால் யுவண்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: டிபாலாவின் ராக்கெட் கோல்..! - அத்லெடிகோ மாட்ரிட் - யுவண்டஸ்
ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிரான குரூப் போட்டியில் யுவென்டஸ் வீரர் டிபாலா அடித்த கோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இம்முறை இவ்விரு அணிகளும் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதால், இவர்களது போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. அலியான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதி முடியும் நேரத்தில் யுவண்டஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. கோல் அடிப்பதற்கான கோணம் கடினாமாக இருந்தபோதிலும், யுவண்டஸ் அணியின் நட்சத்திர பார்வார்டு வீரர் டிபாலா தனது இடதுகாலால் ராக்கெட் வேகத்தில் ஷாட் அடிக்க, அது கோலாக மாறியது.
டிபாலா இடதுகால் வீரர் என்பதால்தான் இந்த கோல் சாத்தியமானது. டிபாலாவின் இந்த கர்லிங் ஷாட்டை அத்லெடிகோ மாட்ரிட் அணியின் தடுப்பாட்டக்காரர்கள், கோல் கீப்பர் யாராலும் தடுக்க முடியவில்லை. இறுதியில் யுவண்டஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. டிபாலாவின் இந்த மிரட்டலான கோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.