தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஹேப்பி பெர்த் டே' கிறிஸ்டியானோ ரொனால்டோ..! - Football player

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் போர்ச்சுகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தனது 34 பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

கோப்பைகளுடன் ரொனால்டோ

By

Published : Feb 5, 2019, 10:41 PM IST


கால்பந்து விளையாட்டில் பொதுவாக, 32 வயதை கடந்தாலே, வீரர்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வார்கள் அல்லது சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் விளையாட தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த வரிசையில், இடம்பிடிக்காத ஒரு சில வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர்.

34 வயதாகியும் இவர் இன்று வரை கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர் என்பதை தினம் தினம் நிரூபித்து வருகிறார். இதனால், இவர் கால்பந்து வரலாற்றில் தலை சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 2001 இல், தனது 16வயதில் தான் இவர் கால்பந்து பயணத்தை தொடங்கினார். 2001 -2003 வரை போர்ச்சுகலின் ஸ்பொர்டிங் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடினார்.

ronaldos

பின் 2003-2009 வரை இங்கிலாந்தின் மான்சஸ்டர் யுனைடட் அணிக்காக விளையாடினார். 2009-2018 வரை ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். 2018 ஜூன் முதல் தற்போது வரை இத்தாலியின் யுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இவரை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டியது மான்சஸ்டர் யுனைடட் அணி தான்.

அப்போதைய மான்சஸ்டர் யுனைடட் பயிற்சியாளர் அலெக்ஸ் ஃபெர்குசன் தான் இவரை தலைசிறந்த கால்பந்து வீரராக மாற்றினார். இதனால், அலெக்ஸ் ஃபெர்குசன் ரொனால்டோவின் மானசீக குருவாக திகழ்ந்து வருகிறார் என்பது கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். கடந்த 2001முதல் இன்று வரை இந்த 18 வருடத்தில் ரொனால்டோ கிளப் அணிக்காகவும், போர்ச்சுகல் அணிக்காக அதிகமான கோல்களை அடித்து ஏரளமான சாதனைகளை படைத்துள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி, ஃபிபாவின் சிறந்த வீரர் உள்ளிட்ட அதிகமான விருதுகளையும் இவர் வென்றுள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் கால்பந்து வீரர்களுக்கும் இவர் இன்ஸ்பிரேஷனமாகவும் விளங்குகிறார்.

ரொனால்டோ கால்பந்து விளையாட்டு மீது அதித ஆர்வம் கொண்டவர். தினம் தினம் தான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்பதற்காக, கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் இவரை போல, கடினமாக உழைப்பார்கள் என்றால் அது சந்தேகம் தான். தோல்வியை எப்போதும் ஏற்றுக் கொள்ளாத மனம் கொண்டவர் இவர்.

ronaldos

இதைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு..

2004 இல் யுரோ சாம்பியன்ஸ் தொடர் போர்ச்சுகலில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி கிரீஸ் அணியிடம் தோல்வி அடைந்து கோப்பை இழந்தது. இதனால் ரொனால்டோ மிகவும் மனவேதனை அடைந்ததோடு, களத்தில் கண்ணீரும் விட்டார். பின் 2016 இல் யுரோ கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்றது. இதில், ரொனால்டோ போர்ச்சுகல் அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி சுற்று வரை அணியை கொண்டு சென்றார். ஆனால், பிரான்ஸ் அணியுடன் மோதிய இறுதிப் போட்டியில், அவருக்கு காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தின் பாதியில் இருந்தே அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ரொனால்டோ களத்தில் கண்ணீர் விட்டப்படியே டக் அவுடுக்கு திரும்பினார்.

காயம் அடைந்தப் போதிலும், ரொனால்டோ, தொடர்ந்து போர்ச்சுகல் அணிக்கு ஆலோசனை தந்தது மட்டுமின்றி, அணியை ஊக்குவித்தார். அணியை எப்படியாவது வெற்றிபெற வைப்பதே இவரது தீர்மானமாக இருந்தது. இறுதியில், போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஓர் வீரராக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ரொனால்டோ ஓர் ஆலோசகராக கோப்பையை வென்றார் என்றே சொல்லலாம்.

ronaldos

ரொனால்டோ தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகவே அமைந்தது. போர்ச்சுகல் அணி யுரோ கோப்பையை வெற்றிபெறும் போது, ரொனால்டோவிற்கு எண்ணற்ற ஆனந்தத்தில் இருந்தார். அவர் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் போர்ச்சுகல் அணி வீரர்கள் அவருக்காகவும் நாட்டிற்காகவும் சிறப்பாக ஆடி கோப்பை பரிசாக தந்தனர். ரொனால்டோ சாதரணமான மனிதர்களும் இன்ஸ்பிரேஷனாக இருக்க மற்றொரு காரணமும் உள்ளது.

ஏழ்மையான குடும்பத்தில் தான் ரொனால்டோ பிறந்தார். ஆனால் தனது ஆயராத உழைப்பும், கால்பந்து மீது இருக்கும் ஆர்மும் தான் இவர் தற்போது அதிகம் வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். வாழ்க்கையில் முடியாது என்பது எதுவும் கிடையாது என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக இருந்துள்ளார். கால்பந்து விளையாட்டில் வலது, இடது ஆகிய இரு கால்களிலாலும், ஹெட்டிங், பைசைக்கிள் கிக் என அனைத்து விதத்தாலும் கோல் அடிக்கும் திறன் கொண்ட ரொனால்டோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ABOUT THE AUTHOR

...view details